வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : நவ 12, 2026 07:27 PM
திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜயராஜ், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் இன்று (நவ.,12) ஆலோசனை நடத்தினார்.
திருப்போரூர் ஒன்றியத்தில், 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை சார்ந்த தண்டலம், கேளம்பாக்கம், படூர், நாவலுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் சுய வருமானம் கொண்டவையாக உள்ளன.
கிராமப்பபுறத்தை சார்ந்த சிறுதாவூர், மானாமதி, ஆமூர், பெரிய விப்பேடு, பெரிய இரும்பேடு, அருங்குன்றம், மடையத்துார் உள்ளிட்ட ஊராட்சிகள் அரசு வருவாயை வைத்து இயங்கும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட வே ண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில், திருப்போரூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜயராஜ், தற்போது நடந்து வரும் வளர்ச்தி திட்ட பணிகளின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, திருப்போரூர் தொகுதியில் சுத்தமான மற்றும் தடையற்ற குடிநீர் வழங்குதல், புதிய சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், மோகனா, பொறியாளர்கள் வசந்தராஜ், பாஸ்கரன், மேலாளர் சைமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
