/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடை ஷட்டரை உடைத்து மொபைல் போன் திருட்டு
/
கடை ஷட்டரை உடைத்து மொபைல் போன் திருட்டு
ADDED : மே 22, 2025 09:57 PM
பெருங்களத்துார்:புது பெருங்களத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ், 32; புது பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையில், புதிய மொபைல் போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 20ம் தேதி இரவு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்; மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த ஹரிஷ், கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, இரண்டு விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 8,000 ரூபாயை திருடி சென்றது தெரிய வந்தது.
இதே போல், அருகேயுள்ள கண்ணாடி விற்பனை செய்யும் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த கூலிங் கண்ணாடி வகைகளும் திருடப்பட்டன.
இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.