ADDED : பிப் 08, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
மறைமலை நகர்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம், 21.
இவர், மறைமலை நகர் அடுத்த பேரனுாரில் தங்கி, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
கவுதம் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு, வேலைக்குச் சென்றார்.
இரவு வீட்டிற்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இரண்டு மொபைல்போன்கள் மற்றும் 3,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கவுதம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின்படி, சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
