ADDED : பிப் 27, 2024 11:08 PM
அ நிறம் | அளவு
மறைமலை நகர்:பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 22. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் கதவை தாழிட்டு துாங்கியுள்ளார்.
நள்ளிரவில் வீட்டுக்கு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சந்தோஷின் இரண்டு மொபைல் போன்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து, சந்தோஷ் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதில், மொபைல் போன்களை திருடிச்சென்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா, 20, என்ற நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
