/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிவேகமாக வந்த கார் மோதி மொபைல் கடை செக்யூரிட்டி பலி
/
அதிவேகமாக வந்த கார் மோதி மொபைல் கடை செக்யூரிட்டி பலி
அதிவேகமாக வந்த கார் மோதி மொபைல் கடை செக்யூரிட்டி பலி
அதிவேகமாக வந்த கார் மோதி மொபைல் கடை செக்யூரிட்டி பலி
ADDED : அக் 15, 2024 07:55 PM
திருப்போரூர்:தாம்பரம் அடுத்த இரும்பலியூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம், 65. இவர் கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை சந்திப்பில் உள்ள தனியார் மொபைல் போன் விற்பனை கடையில், செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், சிவலிங்கம் நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, மொபைல் போன் கடை அருகே, சாலையை ஒட்டி இருக்கையில் அமர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலையில், புதுப்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கத்தை நோக்கி வந்த மாருதி ஸ்விப்ட் கார், இருக்கையில் அமர்ந்திருந்த சிவலிங்கம் மீது மோதியது.
இதில், பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த சிவலிங்கத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் சோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது.
இதையடுத்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜசேகர், 33, என்பதும், இவரும் மதுரையை சேர்ந்த அருண்குமார், 33, என்பவரும் காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தது.
காரை, அருண்குமார் ஓட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.