UPDATED : செப் 30, 2026 04:23 PM
ADDED : செப் 30, 2026 03:01 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகள், கடைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவதால், வியாபாரிகள் பீதியடைகின்றனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் மலையை சுற்றி காப்புக்காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் இருக்கும் குரங்குகள், உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரத்தொடங்கின. தற்போது திருக்கழுக்குன்றம் பஜாரை சுற்றியுள்ள சன்னிதி தெரு, கானாக்கோவில் பேட்டை, அடிவாரம் தெருக்களில் தினமும் உலா வருகின்றன.
அப்பகுதிகளில் உள்ள காய்கறி கடை, பழக் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்களை குறிவைத்து உணவு பொருட்களை சூறையாடுவதால் வியாபாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். குரங்குகளை விரட்ட முயற்சித்தாலும், அவை மக்களை கடிக்க பாய்வதால் வியாபாரிகள் அஞ்சுகின்றனர். தினமும் குரங்குகளின் தொல்லையால், வியாபாரமும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகளுக்குள் புகுந்து வாழைப் பழங்களை துாக்கி செல்கின்றன. முட்டையை உடைத்து குடிக்கின்றன. இதற்கு பயந்து கொண்டே பெரும்பான்மையான வியாபாரிகள் கடைகளை சுற்றி இரும்புக் கூண்டு அமைத்துள்ளனர். இருப்பினும், குரங்குகள் அத்துமீறி கடைக்குள் நுழைந்து உணவு பொருட்களை எடுத்து செ ன்று விடுகின்றன. குடியிருப்புக்குள் நுழை ந்து பெ ண்கள் மற்றும் குழந்தை களையும் அச்சுறுத்தி வருகிறது.
எனவே, திருக்கழுக்குன்றம் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
