sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் மழைக்கால வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு! 24 சிறப்பு மருத்துவ குழுவினர் நியமனம்

/

செங்கையில் மழைக்கால வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு! 24 சிறப்பு மருத்துவ குழுவினர் நியமனம்

செங்கையில் மழைக்கால வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு! 24 சிறப்பு மருத்துவ குழுவினர் நியமனம்

செங்கையில் மழைக்கால வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு! 24 சிறப்பு மருத்துவ குழுவினர் நியமனம்


ADDED : நவ 17, 2024 07:39 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

...

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், குடிநீரில் மழைநீர் மற்றும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், 'டெங்கு' மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் வாயிலாக, மழைக்கால காய்ச்சல் சிறப்பு முகாம், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்களில், 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் பகுதிகளில் அரசு மருத்துவமனை உள்ளன.

இங்கு, காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழைக்கால காய்ச்சல் முகாம், கடந்த அக்., மாதத்தில் துவங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், ஒவ்வொரு வட்டாரத்திலும், இரண்டு மருத்துவக் குழு என, 16 மருத்துவக் குழுவினர் உள்ளனர்.

இந்த குழுவில் டாக்டர் உட்பட 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நடமாடும் எட்டு மருத்துவக்குழு மூலம், காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்டத்தில், 24 சிறப்பு குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்புனர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு முகாம்கள் நடக்கின்றன. காய்ச்சல் உள்ளவர்கள் முகாமில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த முகாமில், கடந்த அக்டோபர் மாதம் வரை, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் என, 60,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

முதியோர், குழந்தைகள் மற்றும் இணைநோய் உள்ளோர் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த முகாம்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி பகுதி மற்றும் காட்டாங்கொளத்துார், திருப்போரூர் ஆகிய வட்டாரங்களில், காய்ச்சல், டெங்கு அதிகமாக உள்ளன.

இப்பகுதியினர், அரசு மருத்துவமனைகளை தவிர்த்து, தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில், மழைக்கால காய்ச்சல் முகாமில், அக்டோபர் மாதம் வரை 200க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மற்றும் 50 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலுக்கு தேவையான மருந்தகங்கள் இருப்பில் உள்ளன. மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெறலாம்.

மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

முறையான பராமரிப்பு இல்லை

செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிக்காமல், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் மழைநீர் கலந்து வருவதாலும், மழைநீர் கால்வாய்களில் கொசு மருந்து முறையாக அடிக்காததால், கொசு உற்பத்தி அதிகமாகி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில், குடிநீரில் குளோரின் கலந்து முறையாக வினியோகம் மற்றும் கால்வாய்களில் கொசு மருந்து முறையாக அடிப்பதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.








      Dinamalar
      Follow us