/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதியவரை கொல்ல முயன்ற வழக்கில் தாய், மகனுக்கு தலா 2 ஆண்டு சிறை
/
முதியவரை கொல்ல முயன்ற வழக்கில் தாய், மகனுக்கு தலா 2 ஆண்டு சிறை
முதியவரை கொல்ல முயன்ற வழக்கில் தாய், மகனுக்கு தலா 2 ஆண்டு சிறை
முதியவரை கொல்ல முயன்ற வழக்கில் தாய், மகனுக்கு தலா 2 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 10, 2025 09:19 PM
செங்கல்பட்டு:முதியவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தாய், மகனுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காபீர்தாஸ், 80; விவசாயி.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த குமரேசன் என்பவரது மனைவி டில்லி, 45, மகன் லோகேஷ், 25, ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2018 ஜூலை 1ம் தேதி காபீர்தாஸ், விவசாய நிலத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த லோகேஷ், டில்லி ஆகியோர், வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டில்லி, லோகேஷ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் டில்லி, லோகேஷ் ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 15,000 ரூபாய் அபராதம் விதித்தும், நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.