/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூங்குணம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : செப் 03, 2025 12:54 AM
சித்தாமூர்:பூங்குணம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பூங்குணம் கிராமத்தில், மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில், குடியிருப்பு பகுதி உள்ளது.
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லும் பயணியர் என, ஏராளமானோர் இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்து செல்கின்றனர்.
ஆனால், கிராமத்திற்குச் செல்லும் சாலையில், பல ஆண்டுகளாக மின் விளக்கு வசதி இல்லை.
சாலை அருகே காட்டுப்பகுதி உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மின் விளக்கு இல்லாததால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பூங்குணம் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.