/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் முறையாக மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் முறையாக மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் முறையாக மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்கள் முறையாக மூட வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : அக் 29, 2025 12:27 AM

மறைமலை நகர்: மறைமலை நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூட வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது.
இதில் ஆறு வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
விடுபட்ட 15 வார்டுகளிலும், 300.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பாதாள சாக்கடை அமைக்க, கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது காட்டாங்கொளத்துார், பேரமனுார், சட்டமங்கலம், ரயில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ரயில் நகர் பகுதியில் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில், முறையாக மண் கொட்டி மூடப்படாததால், சாலையில் செல்லும் வாகனங்கள் அதில் சிக்கிக் கொள்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட பிரதான தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள் இதில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நேற்று காலை பெய்த மழை காரணமாக சாலை முழுதும் சகதியாக மாறியது.
காலையில் அந்த வழியாக வந்த 'எய்ச்சர்' சரக்கு வாகனம், இந்த பள்ளத்தில் சிக்கியது. அதன் பின், மற்றொரு சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி, சரக்கு வாகனம் மீட்கப்பட்டது.
தெருக்களில் சைக்கிள்களில் செல்லும் குழந்தைகள் வழுக்கி விழுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளத்தை முறையாக மூட, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

