/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையின் நடுவே அபாய பாறை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
சாலையின் நடுவே அபாய பாறை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையின் நடுவே அபாய பாறை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையின் நடுவே அபாய பாறை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : மே 01, 2025 01:18 AM

செய்யூர்:அரியனுாரில், ஓணம்பாக்கம் செல்லும் சாலை நடுவே உள்ள அபாய பாறையை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே அரியனுார் கிராமத்தில், விழுதமங்கலம் - ஓணம்பாக்கம் செல்லும் 9 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
அரியனுார், கல்பட்டு, நெசப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
இதில், அரியனுார் திரவுபதி அம்மன் கோவில் எதிரே சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது. சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
மேலும், இந்த சாலையில் வளைவுப் பகுதியில், பாறை ஒன்று சாலை நடுவே உள்ளது. இதனால், சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
புதிதாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இரவு நேரத்தில் வேகமாகச் செல்லும் வாகனங்கள், பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைத்து, சாலையின் நடுவே உள்ள பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.