/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செட்டிபுண்ணியம் -- வெங்கிடாபுரம் சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ADDED : அக் 13, 2025 12:42 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் - வெங்கிடாபுரம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டி புண்ணியம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் செட்டிபுண்ணியம் -- வெங்கிடாபுரம் சாலை உள்ளது.
இந்த சாலை, பாலுார் -- சிங்கபெருமாள்கோவில் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது. இப்பகுதி மக்கள், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்த சாலை, பல இடங்களில் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், மின் விளக்குகளும் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, செட்டிபுண்ணியம் -- வெங்கிடாபுரம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.