/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பரனுாரில் பழுதான தானியங்கி சிக்னல் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2025 11:30 PM

மறைமலை நகர் பரனுார் பகுதியில், பழுதாகியுள்ள தானியங்கி சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி., சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், பரனுார் பகுதியில் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே, சாலை சந்திப்பு உள்ளது.
பரனுார், செட்டிபுண்ணியம், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தினமும் இந்த சந்திப்பு வழியாக ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து சென்று வருகின்றனர்.
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி, 'சிக்னல்' இயங்காமல், வெறும் காட்சிப்பொருளாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அருகில் பேருந்து நிறுத்தமும் உள்ளதால், பயணியர் ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து செல்லும் போது, அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது.
இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த தானியங்கி சிக்னலை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.