/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவனுார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
காவனுார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஆக 28, 2025 02:05 AM

மறைமலை நகர்:காவனுார் செல்லும் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காட்டாங்கொளத்துார் --- காவனுார் சாலை 5 கி.மீ., உடையது. இந்த சாலையை காட்டாங்கொளத்துார் கொருங்கந்தாங்கல், கோனாதி, காவனுார் உள்ளிட்ட செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கு மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை படப்பை செல்லும் இணைப்பு சாலை. இந்த சாலையில் காட்டாங்கொளத்துார், வி.ஜி.என் அடுக்குமாடி குடியிருப்பு எதிரே பல இடங்களில் சாலை மிகவும் சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப் படுகின்றன.
இதனால் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஏற்பட்டு வேலை மற்றும் கல்லுாரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.