/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீக்கனாங்குப்பம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
சீக்கனாங்குப்பம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
சீக்கனாங்குப்பம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
சீக்கனாங்குப்பம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : செப் 29, 2025 01:39 AM

பவுஞ்சூர்:வேலுார் கிராமத்தில் இருந்து சீக்கனாங்குப்பம் செல்லும் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்த வேலுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சீக்கனாங்குப்பம் கிராமத்திற்குச் செல்லும் 2.5 கி.மீ., தார்ச்சாலையை பாக்கூர், வீரபோகம், வேலுார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் ஏறி இறங்கும் போதும், ஜல்லிகள் மீது வாகனம் ஏறும் போதும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்இந்த சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.