/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் சந்திப்பிலுள்ள சிக்னலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கோவளம் சந்திப்பிலுள்ள சிக்னலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கோவளம் சந்திப்பிலுள்ள சிக்னலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கோவளம் சந்திப்பிலுள்ள சிக்னலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : அக் 31, 2025 01:11 AM

திருப்போரூர்:  கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில், செயல்படாமல் உள்ள 'சிக்னலை' சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியத்திலுள்ள இ.சி.ஆர்., சாலையில், திருவான்மியூர் மற்றும் மாமல்லபுரம் இடையே, கோவளம் ஊராட்சி உள்ளது.
இங்கு, கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில், போக்குவரத்து,'சிக்னல்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, இந்த சிக்னல் செயல்படாமல் உள்ளது.
இதனால் திருவான்மியூரிலிருந்து கோவளம், மாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் வரும் வாகனங்களும், கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம், மாமல்லபுரம் செல்லும் வாகனங்களும், தாறுமாறாக செல்கின்றன.
பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையைக் கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து, மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.