/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
/
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 22, 2025 10:51 PM

மறைமலை நகர், சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலை 1.2 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் ஒரு பகுதி செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி எல்லையில் உள்ளது .
மற்றொரு பகுதி காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், நாட்டராம்பட்டு ஊராட்சியில் உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்ததால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால், சாலை சீரமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வரின் கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு, 66.60 லட்சம் ரூபாயில், புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த சாலையில் 100 மீட்டர் துாரம், சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளதால், இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட அந்த இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சட்டமங்கலம் -- வடமேல்பாக்கம் சாலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால், சிதிலமடைந்த சாலையில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. தற்போது, பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், இருசக் கர வாகனங்களில் செல் வோர் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர் .
மேலும், அவசர காலங்களில் பயணம் செய்வது சவாலாக உள்ளது. எனவே, விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

