/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
/
சூணாம்பேடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
சூணாம்பேடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
சூணாம்பேடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : ஆக 25, 2025 01:32 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சியில் சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட சூணாம்பேடு காலனியில் இருந்து வேலுார் கிராமத்திற்கு செல்லும் 3.5 கி.மீ., தார் சாலை உள்ளது.
சின்னகளக்காடி, வேலுார், தென்னேரிப்பட்டு, சூரக்குப்பம், கல்பட்டு ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சாலை கடந்த 15 ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாய் காணப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை சீரமைக்கவும், ஐந்து ஆண்டுகளுக்கு சாலை பராமரிக்கவும் 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாலை சீரமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் சாலையில் மீண்டும் பள்ளங்கள் ஏற்படுகின்றன.
இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.