சாலையை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
சாலையை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : மார் 01, 2026 06:17 AM

செய்யூர்: வி ல்லிப்பாக்கம் பகுதியில் இருந்து வெடால் வழியாக, செய்யூர் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தில் இருந்து, வெடால் வழியாக செய்யூர் செல்லும் 16 கி.மீ., நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை வெடால், சித்தார்காடு, நாங்களத்துார், இரும்பேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். சாலை விவசாய நிலங்களுக்கு மத்தியில் உள்ளதால் அதிக அளவில் டிராக்டர்,நெல் அறுவடை இயந்திரம் போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்கி ன்றன.
தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், இரவு நேரத்தில் குறுகிய சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.
