/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்ப்பெயர் கிராம பாலத்தில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
நீர்ப்பெயர் கிராம பாலத்தில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நீர்ப்பெயர் கிராம பாலத்தில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
நீர்ப்பெயர் கிராம பாலத்தில் தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : நவ 03, 2025 10:41 PM

செய்யூர்: நீர்ப்பெயர் கிராமத்தில் உள்ள பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, நீர்ப்பெயர் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையை தொன்னாடு, நீலமங்கலம், மேல்வசலை, கீழ்வசலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை நடுவே, ஏரியின் உபரிநீர் கடக்கும் தரைப்பாலம் இருந்தது.
மழைக்காலத்தில் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பாக, கடந்தாண்டு 1.54 கோடி ரூபாய் மதிப்பில், 35 அடி அகலத்தில், கால்வாயின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், பாலத்தின் ஓரத்தில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, உயர்மட்ட பாலத்தில் தடுப்புகள் அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

