/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருதேரி சாலையில் சிக்னல் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
/
மருதேரி சாலையில் சிக்னல் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
மருதேரி சாலையில் சிக்னல் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
மருதேரி சாலையில் சிக்னல் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 10, 2025 01:44 AM

மறைமலை நகர்:மருதேரி சாலையிலுள்ள 'சிக்னல்' விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் -- திருப்போரூர் சாலையின் இணைப்புச் சாலையான இந்த சாலையில், கோவிந்தபுரம் பகுதியில் உள்ள சாலை வளைவில், விபத்துகளை தடுக்க 'சிக்னல்' அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த சிக்னல் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளன. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த விபத்துகள் காரணமாக, எச்சரிக்கை சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த சிக்னல் விளக்குகள் பராமரிப்பின்றி, எரியாமல் உள்ளன.
இதனால், அடிக்கடி சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சரக்கு வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, இந்த சிக்னல் விளக்குகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.