/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுகரணை சாலை மோசம் வாகன ஓட்டிகள் அவதி
/
சிறுகரணை சாலை மோசம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 15, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி த்தாமூர் அருகே இரும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகரணை கிராமத்தில் இருந்து இந்தலுார் செல்லும் 5 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.
இந்தலுார், கோட்டைப்புஞ்சை, சிறுகரணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள சிறுகரணை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.கந்தவேல்,
சிறுகரணை