தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


UPDATED : ஜூன் 20, 2026 04:48 PM

ADDED : ஜூன் 20, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 04:48 PM ADDED : ஜூன் 20, 2026 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கபெருமாள் கோவில்:செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வல்லம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் -- திருப்போரூர் கூட்டு சாலை 3 கி.மீ., துாரம் கொண்டது.

இந்த சாலை வழியாக மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதை சுற்றியுள்ள கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், அம்மணம்பாக்கம் சுடுகாடு பகுதியில் இருந்து திருப்போரூர் சாலை இணைப்பு வரை பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலை சார்பில் போடப்பட்ட சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

அம்மணம்பாக்கம் -- திருப்போரூர் சாலையில், விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் அச்ச உணர்வுடன் செல்லும் நிலை உள்ளது.

வேலை முடித்து வீட்டிற்கு தனியே செல்லும் நபர்களை தாக்கி மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சாலையில் ஒருபுறம் காப்பு காடுகள் உள்ளன.

இதனால், வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி அளிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us