/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துார் சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
காட்டாங்கொளத்துார் சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காட்டாங்கொளத்துார் சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
காட்டாங்கொளத்துார் சாலையில் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 25, 2025 10:39 PM

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே சர்வீஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டாங்கொளத்துார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் நுழைவு வாயில் அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொண்டனர்.
பணிகள் முடிந்து பள்ளம் சரியாக மூடப்படாததால் சாலை பெயர்ந்து மழை நீர் தேங்கி உள்ளது.
இதில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு 39 ஊராட்சிக்கு உட் பட்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்துசெல்கின்றனர்.
மேலும் இந்த வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம், வேளாண் விரிவாகக் மையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் பலர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சர்வீஸ் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு சாலை பெயர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.

