/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை நடுவே இரும்புத்துாண் பீதியுடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
/
ஜி.எஸ்.டி., சாலை நடுவே இரும்புத்துாண் பீதியுடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
ஜி.எஸ்.டி., சாலை நடுவே இரும்புத்துாண் பீதியுடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
ஜி.எஸ்.டி., சாலை நடுவே இரும்புத்துாண் பீதியுடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 09, 2025 02:12 AM

மறைமலை நகர்:தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த சாலையில், இரும்புலியூர் -- வண்டலுார் வரை 2.3 கி.மீ., துாரம் 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ., துாரம் வரை 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கூடுவாஞ்சேரி -- செட்டிபுண்ணியம் மகேந்திரா சிட்டி வரை, 13.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அப்போது நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு பகுதிகளில் புதிதாக, நீளமான வழிகாட்டி பலகைகள் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டன.
இதற்காக, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், சாலையின் நடுவே இரும்புத்துாண் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த பகுதியில், ஸ்ரீ பெரும்புதுார் செல்லும் மேம்பாலம், சமீபத்தில் திறக்கப்பட்டது.
சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் மேம்பாலத்தின் மீது செல்லும் வாகனங்களுக்கு, இந்த இரும்புத் துாண் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் தினமும், அதிக அளவில் புதிய வாகனங்கள் இந்த பகுதியைக் கடந்து செல்கின்றன.
சாலையின் நடுவே உள்ள இந்த இரும்புத்துாண், ஆபத்தான நிலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இதை மாற்றியமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.