/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேகத்தடுப்பில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' ஒட்ட வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
/
வேகத்தடுப்பில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' ஒட்ட வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
வேகத்தடுப்பில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' ஒட்ட வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
வேகத்தடுப்பில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' ஒட்ட வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
ADDED : மே 09, 2025 02:36 AM

திருப்போரூர்:திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் கொண்டது. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இச்சாலை இடையே கரும்பாக்கம் பகுதி உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளி, வணிக கடைகள், சர்ச், குடியிருப்புகள் உள்ளன.
இங்கு, சாலையில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இங்கு எந்த ஒரு வேகத் தடுப்பு, எச்சரிப்பு சிக்னல் போன்ற பாதுகாப்பு வசதியும் இல்லாத நிலையில், இந்த வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து, விபத்தை தடுக்க வளைவு பகுதியில் வேகத்தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனாலும், இரவு நேரத்தில் இந்த வேகத்தடுப்பு இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.
எனவே, வேகத்தடுப்பு இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகையில், அதில் ஒளிரும் 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.