ADDED : பிப் 18, 2025 05:41 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த இள்ளலுார் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன்,36. இவர், திருப்போரூர் மத்திய ஒன்றிய பா.ம.க., செயலராக இருந்தார். மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்தார்.
இவருக்கு பார்கவி என்ற மனைவியும், ஓவியா, தேவசேனா என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த 13ம் தேதி இரவு 9:00 மணியளவில், 'பைக்'கில் திருக்கழுக்குன்றம் -- திருப்போரூர் சாலையில் சென்றார்.
அப்போது, தண்டலம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில், கங்காதரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கிருந்தோர், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாக அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.