/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார் குப்பம் போட்--ஹவுஸிற்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை
/
முதலியார் குப்பம் போட்--ஹவுஸிற்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை
முதலியார் குப்பம் போட்--ஹவுஸிற்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை
முதலியார் குப்பம் போட்--ஹவுஸிற்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : பிப் 10, 2025 11:43 PM
செய்யூர், செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளி பகுதியில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ரெயின் ட்ராப் போட் - -ஹவுஸ் இயங்குகிறது.
வார விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் விழா காலங்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் வாயிலாக வந்து போட் --ஹவுஸில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணியர் மகிழ்ந்து வருகின்றனர்.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் தினசரி 2 -5 ஆயிரம் வரை சுற்றுலாப்பயணியர் வந்து செல்கின்றனர். நடுத்தர குடும்பத்தினர் போட் - ஹவுஸில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள எல்லையம்மன் கோவில் அல்லது முகையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ வாயிலாகவே வந்து செல்கின்றனர்.
ஆட்டோவில் வந்து செல்ல 400 ரூபாய் வரை கேட்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் முதலியார்குப்பம் போட் ஹவுஸ் செல்வதை தவிர்க்கின்றனர்.
முதலியார்குப்பம் போட் -- ஹவுஸில் பேருந்துகள் நின்று சென்றால் தழுதாளிக்குப்பம்,முட்டுக்காடு உள்ளிட்ட கிராம மக்களும் கூடுதல் பயனடைவார்கள்,ஆகையால் இங்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை என சுற்றுலாப் பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முதலியார்குப்பம் போட்-ஹவுஸ் உள்ள பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைத்து,சுற்றுலாப் பயணியர் வருகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

