/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளம்பர பதாகை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
/
விளம்பர பதாகை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
விளம்பர பதாகை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
விளம்பர பதாகை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : ஜன 18, 2025 01:49 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் பகுதியில், அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்தன. இதனால், 200 க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களில், படுகாயம், 25 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. இதை தடுக்க, மேம்பாலம் அருகில் ரவுண்டான மற்றும் இருபுறமும், மழைநீர் கால்வாய் அமைத்து, தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்த பகுதில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. விபத்து நடைபெறும் என போலீசார் அறிவிக்கப்பட்ட பகுதியில், அரசியல் கட்சியினர் விளம்பர பாதைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விளம்பர பாதைகள், நகராட்சி நிர்வாகம் அனுமதியில்லாமல் வைத்துள்ளனர்.
இந்த விளம்பரங்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்புவதால், விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளன.
இதை அகற்ற வேண்டிய, நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. பெரிய விபத்துக்கள் நடக்கும்போது மட்டும் தான், அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
விபத்துக்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை எடுக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபடவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.