/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி
/
சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி
சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி
சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் தள்ளுவண்டி
ADDED : ஜன 17, 2025 09:44 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், சாலையோர சிறு கடை வியாபாரிகளுக்கு, தள்ளுவண்டிகள் வழங்க, நகர்மன்றம் ஒப்புதல் வழங்கியது.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், நத்தம்,மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன. இந்நகரில், சாலையோர சிறு கடை வியாபாரிகள், அடையாள அட்டையுடன் வியாபாரம் செய்கின்றனர்.
வியாபாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்பங்கள் பரிசீலினை செய்தனர்.
இதில், 25 சிறு கடை வியாபாரிகளுக்கு, தள்ளு வண்டிகள் வழங்கவும், சிறு கடை வியாபார குழு அமைக்கவும், நகரமன்றத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.