/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாயமான பள்ளி மாணவன் ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு
/
மாயமான பள்ளி மாணவன் ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு
ADDED : அக் 09, 2024 08:18 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துாரைச் சேர்ந்த ரமேஷ் மகன் கமலேஷ்குமார், 13. கருத்து வேற்பாடால் மனைவியை பிரிந்த நமேஷ், வேறு பெண்ணை திருமணம் செய்து, சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் வசிக்கிறார்.
தாய் இறந்த பின், பாட்டி சாந்தாவிடம் வசிக்கும் கமலேஷ்குமார், வெங்கப்பாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அக்., 7ம் தேதி காலை, பள்ளிக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். ஆனால், பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், பாட்டி சாந்தா புகார் அளித்தார். மாணவன் எங்கு சென்றார், இருசக்கர வாகனத்தில் சென்றவர் கடத்தினாரா என, பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தேடிய நிலையில், மாணவன் படத்துடன் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு, ரயிலில் வந்து இறங்கிய அவரை, அப்பகுதியினர் சமூக ஊடக படம் வாயிலாக அடையாளம் கண்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரமேஷ் வெளிநாட்டு பணியில் உள்ளதாகவும், அங்கு வசிக்கும் தன் மூத்த சகோதரரை சந்திக்க கமலேஷ்குமார் சென்றதாகவும், அவரை இங்கு மீட்டு வந்து விசாரிக்க உள்ளதாகவும், திருக்கழுக்குன்றம் போலீசார் தெரிவித்தனர்.

