/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி
/
தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி
தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி
தெருவில் மின்விளக்கு வசதியின்றி நயினார்குப்பம் கிராமத்தினர் அவதி
ADDED : மே 24, 2025 08:40 PM
செய்யூர்:நயினார்குப்பம் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட தெருவில், மின் விளக்கு வசதியின்றி பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு நயினார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, குடியிருப்பு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், பள்ளிக்கூடத் தெரு உள்ளது.
இந்த சாலையில் பல ஆண்டுகளாக, மின்விளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.
மின் விளக்கு அமைக்க கோரி, பேரூராட்சி சார்பாக மின்வாரியத்திற்கு மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கூட தெரு இருளில் மூழ்கி காணப்படுகிறது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் நயினார்குப்பம், பள்ளிக்கூடத் தெருவில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.