/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியை துார்வாரி பாதுகாக்க வேண்டுகோள்
/
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியை துார்வாரி பாதுகாக்க வேண்டுகோள்
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியை துார்வாரி பாதுகாக்க வேண்டுகோள்
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியை துார்வாரி பாதுகாக்க வேண்டுகோள்
ADDED : பிப் 13, 2024 08:12 PM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பின்புறம், அம்பேத்கர் சாலை அடுத்து சிறிய தாங்கல் ஏரி உள்ளது.
மலை மேட்டுப்பகுதியில் இருந்தும், நெல்லிக்குப்பம் சாலை மற்றும் ராணி அண்ணா நகர், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் இருந்தும், இந்த ஏரிக்கு நீர் வருகிறது.
சமீபத்தில் பெய்த மழையில், இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால், ஏரியில் உள்ள மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தற்போது, இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் அதிகரித்து, ஏரியில் உள்ள நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால், ஏரியின் சுற்றுப்புற பகுதியில், கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. எனவே, இந்த ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றி, ஏரியை துார் வாரி பாதுகாக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஏரி நீர், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறும் பாதுகாத்து வருகிறது.
தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால், சிறிய தாங்கல் ஏரியை ஆழப்படுத்தி, சீரமைத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

