/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் தேசிய தீயணைப்பு சேவை தினம்
/
மறைமலைநகரில் தேசிய தீயணைப்பு சேவை தினம்
ADDED : ஏப் 14, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் மறைமலைநகர் அண்ணாசாலையில், மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆண்டுதோறும், தேசிய தீயணைப்பு தினம் ஏப்., 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில், தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும், தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிக்கப்பட்டது.