/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய, மாநில பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
/
தேசிய, மாநில பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
தேசிய, மாநில பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
தேசிய, மாநில பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம்
ADDED : ஜன 22, 2025 12:21 AM

சென்னை,
தேசிய மற்றும் மாநில அளவிலான பால் பேட்மின்டன் போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் முதலிடத்தை தட்டிச் சென்றன.
தேசிய அளவிலான சீனியர் பால் பேட்மின்டன் போட்டி, ஆந்திர மாநிலம், பலுகூர் பகுதியில் நடந்தது.
போட்டிகள், 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தது. 'லீக்' போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 30, 35 - 31, 35 - 31 என்ற கணக்கில், தெற்கு மத்திய ரயில்வே அணியை தோற்கடித்தது.
மற்றொரு லீக் சுற்றில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 30 - 35, 35 - 31, 35 - 31 என்ற கணக்கில், மும்பை மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.
அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், தெற்கு மத்திய ரயில்வே இரண்டாமிடத்தையும், மும்பை மேற்கு ரயில்வே மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றன.
அதேபோல், கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் நடந்த மாநில அளவிலான சீனியர் பால் பேட்மின்டன் போட்டியிலும், எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடத்தையும், சென்னை லயோலா மற்றும் திண்டுக்கல் ஏ.ஆர்., மருத்துவமனை ஆகிய அணிகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றின.