/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முக்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
/
முக்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
ADDED : செப் 28, 2025 12:31 AM

செங்கல்பட்டு;ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா துவங்கி, அக்., 3ம் தேதி வரை நடக்கிறது.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. அக்., 3ம் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் பல்வேறு அலங்காரங்களில், அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி த ருகிறார். ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் மலர் அலங்காரத் தில், நேற்று முன்தினம், எழுந்தருளினார்.
சு மங்கலி பூஜை நடைபெற்றது. ஆத்துாரை சுற்றி யுள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.