/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
நெடுங்குன்றம் மார்க்க மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : டிச 17, 2025 06:05 AM

பெருங்களத்துார்: பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நீண்ட நாட்களாக துவக்கப்படாமல் இருந்த நெடுங்குன்றம் சாலை மார்க்கமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிகிறது.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், மாநில நெடுஞ்சாலை- மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 234 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன.
முதல் கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022, செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
தொடர்ந்து, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, சீனிவாசா நகரில் இறங்கும் பாதையும், கடந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் மார்க்கமான பாதைகளும் திறக்கப்பட்டன.
இம்மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் சாலை மார் க்கமான பணிகள் மட்டும் துவக்கப்படாமல் இருந்தன.
அப்பாதை அமையும் இடத்தின் பெரும் பகுதி, வனத்துறைக்கு சொந்தமானவை என்பதால், அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு, இது தொடர்பாக அனுப்பிய கடிதத்தை, மத்திய வனத்துறை திருப்பி அனுப்பியது.
அதன்பின், இரண்டாவது முறையாக நிலம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும், நெடுங்குன்றம் சாலை வழியாக மேம்பாலம் இறங்கும் இடத்தில் இருந்த துணை மின் நிலையத்தை அகற்ற, 23 கோடி ரூபாயை, மின் வாரியத்திற்கு நெடுஞ்சாலைத் துறை செலுத்தியது.
பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், 0.9 ஹெக்டர் நிலத்திற்கு, மத்திய வனத்துறை அனுமதி வழங்கியதாலும், துணை மின் நிலையம் அகற்றப்பட்டதாலும், 27 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின.
தற்போது, பணிகள் வேகமெடுத்து, மேம்பாலப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதனால், பல ஆண்டுகள் போராட்டத்தின் பலனாக, நெடுங்குன்றம் மார்க்கமான பாதை, விரைவில் பயன்பாட்டி ற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

