/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்
/
சாய்ந்த மின் கம்பத்தை மாற்றுவதில் அலட்சியம்
ADDED : ஜன 19, 2025 02:22 AM

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீ பெரும்புதுார் சாலை 25 கி. மீ., துாரம் உடையது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும் திருக்கச்சூர், கொளத்துார், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர். ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இதில் சென்று வருகின்றன.
இந்த சாலையில் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகில் சாலை ஓரம் மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உயர் மின் அழுத்த மின்சாரம் செல்கிறது.
இந்த மின் கம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.
மின் வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.