/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார நிலையத்திற்கு புது கட்டடம் நென்மேலிவாசிகள் எதிர்பார்ப்பு
/
சுகாதார நிலையத்திற்கு புது கட்டடம் நென்மேலிவாசிகள் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையத்திற்கு புது கட்டடம் நென்மேலிவாசிகள் எதிர்பார்ப்பு
சுகாதார நிலையத்திற்கு புது கட்டடம் நென்மேலிவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 11, 2025 01:46 AM

செங்கல்பட்டு:நென்மேலி ஊராட்சியில், ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த நென்மேலி ஊராட்சியில், ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது.
நென்மேலி, மலாலிநத்தம், துஞ்சம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு இங்கு வருகின்றனர். கர்ப்பிணியர் பதிவு செய்வதும் இங்கு நடக்கிறது.
இந்த சுகாதார நிலைய கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
அதனால், தற்போது கட்டடத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மற்றும் கலெக்டரிடம், கிராமவாசிகள் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது, தனியார் கட்டடத்தில் குறுகிய இடத்தில், ஆரம்ப துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, கிராமவாசிகள் இடநெருக்கடியில் சிரமப்படுகின்றனர்.
எனவே, கிராமவாசிகள் நலன் கருதி, ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.