/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஷட்டரை உடைத்து திருடிய நேபாள இளைஞர் கைது
/
ஷட்டரை உடைத்து திருடிய நேபாள இளைஞர் கைது
ADDED : பிப் 09, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, வடபழனி போலீசார் நேற்று அதிகாலை, வடபழனி 100 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நபரை, மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர், நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், 18, என, தெரிந்தது. இவர், வேலை இல்லாததால், வடபழனி காவல் நிலைய எல்லையில் உள்ள ஐந்து கடைகளின் ஷட்டரை உடைத்து திருடியது தெரிந்தது.
இதையடுத்து, சந்தோசஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2,500 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

