/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2.24 கோடியில் புதிய கட்டடம்
/
செய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2.24 கோடியில் புதிய கட்டடம்
செய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2.24 கோடியில் புதிய கட்டடம்
செய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2.24 கோடியில் புதிய கட்டடம்
UPDATED : ஜூலை 03, 2025 01:34 AM
ADDED : ஜூலை 03, 2025 01:32 AM

செய்யூர்:செய்யூரில், 2.24 கோடி ரூபாயில், புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
செய்யூர் ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மையம் அருகே, 10 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
தற்காலிகமாக குளக்கரை அருகே சிறிய கட்டடம் கட்டப்பட்டு, தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.
போதிய இடவசதி இல்லாமல் தீயணைப்புத் துறையினர் அவதிப்பட்டு வருவதால், புதிய கட்டடம் அமைக்க, செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பாக புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்ட, கடந்தாண்டு செப்டம்பரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, 5,661 சதுரஅடி பரப்பளவில், 2.24 கோடி ரூபாய் மதிப்பில், அலுவலகம், ஓய்வு அறை, ஆலோசனை கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நிலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. சில நாட்களில் பூமி பூஜை போடப்பட்டு, கட்டுமானத்திற்கான பணிகள் துவங்கப்படும் என, தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.