/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ரூ.10 கோடியில் புதிதாக நகர பேருந்து நிலையம்
/
செங்கையில் ரூ.10 கோடியில் புதிதாக நகர பேருந்து நிலையம்
செங்கையில் ரூ.10 கோடியில் புதிதாக நகர பேருந்து நிலையம்
செங்கையில் ரூ.10 கோடியில் புதிதாக நகர பேருந்து நிலையம்
ADDED : ஜூலை 28, 2025 11:43 PM
செங்கல்பட்டு,செங்கல்பட்டு அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிதாக நகர பேருந்து நிலையம் அமைக்க, அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு நகராட்சியின் மையப்பகுதியில், பேராறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இங்கு பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணியர், அமர இருக்கை வசதியில்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், பேருந்து நிலைய கட்டடத்தின் மேல் தளத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து, கட்டடம் வலுவிழுக்கும் சூழல் உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து, துர்நாற்றம் வீசுகிறது.
அத்துடன், இந்த பேருந்து நிலைய பகுதியில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பேருந்துகள் உள்ளே வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது .
அதன் பின், கடந்த மார்ச் 25ம் தேதி சட்டசபை கூட்டத்தில், செங்கல்பட்டில் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், புதிய நகர பேருந்து நிலையம் கட்ட, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின், புதிய நகர பேருந்து நிலையம் கட்ட, நகராட்சி நிர்வாகம் 'டெண்டர்' விட்டு, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்தம் எடுத்தனர்.
பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க, தனியார் ஒப்பந்ததாரருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய நகர பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை துவக்கி, விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
செங்கல்பட்டு புதிய நகர பெருந்து நிலையம் கட்ட, சட்டசபை கூட்டத்தொடர் மானிய கோரிக்கையின் போது, 10 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க, ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு புதிய நகர பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகளும், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் கட்டப்படும் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகளும் வந்து செல்லும் வகையில், ஏற்பாடு செய்யப்படுகிறது. - ஆண்டவன், நகராட்சி கமிஷனர், செங்கல்பட்டு