/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
/
செங்கையில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 26, 2025 02:04 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டராக நியமிக்கப்பட்ட சினேகா பொறுப்பேற்றார்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த அருண்ராஜ், பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல் இயக்குநராக பணிபுரிந்த சினேகா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டராக சினேகா பொறுப்பேற்றார். மாவட்டத்தில், கலெக்டர்களாக ஜான்லுாயிஸ், ராகுல்நாத், அருண்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். முதன் முறையாக பெண் கலெக்டராக சினேகா பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு, அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.