/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் நகராட்சிக்கு புது கமிஷனர் நியமனம்
/
மாமல்லபுரம் நகராட்சிக்கு புது கமிஷனர் நியமனம்
ADDED : அக் 28, 2025 09:55 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் நகராட்சிக்கு, புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகராட்சிப் பகுதி, சர்வதேச சுற்றுலா இடமாக விளங்குகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சுற்றுலா மற்றும் பிற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த கருதி, சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்ட இவ்வூர், கடந்த பிப்ரவரி மாதம், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதன் முதல் கமிஷனராக, சுவிதாஸ்ரீ நியமிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றார். நிர்வாக முக்கிய அதிகாரியான கமிஷனர், இப்பகுதி செயல்பாடுகள் குறித்து அறிவதற்கே, பல மாதங்கள் ஆகும். ஆனால், ஒரே மாதத்தில் அவர் மாற்றப்பட்டார்.
அடுத்த கமிஷனரான கவின்மொழியும், பணியில் நீடிக்கவில்லை. மதுராந்தகம் நகராட்சி கமிஷனர் அபர்ணா, கடந்த இரண்டு மாதங்களாக, இங்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.
இச்சூழலில், நகராட்சிப் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி கமிஷனர் பாலமுருகனை, மாமல்லபுரம் நகராட்சி கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

