/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்தி எதிரொலி செய்யூர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் இருக்கை அமைப்பு

ADDED : அக் 09, 2024 10:48 PM

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில், எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் உள்ளது. இப்பகுதியில், வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் மற்றும் பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதனால், தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், செய்யூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, செய்யூர் ஊராட்சி பொது நிதியில் இருந்து, 30 பேர் அமரக்கூடிய வகையில், புதிதாக 10 கான்கிரீட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.