/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவு நேர மின்வெட்டால் அச்சிறுபாக்கம் பகுதியில் அவதி
/
இரவு நேர மின்வெட்டால் அச்சிறுபாக்கம் பகுதியில் அவதி
இரவு நேர மின்வெட்டால் அச்சிறுபாக்கம் பகுதியில் அவதி
இரவு நேர மின்வெட்டால் அச்சிறுபாக்கம் பகுதியில் அவதி
ADDED : ஏப் 28, 2025 12:57 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம், ஒரத்தி பகுதிகளில், இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அச்சிறுபாக்கம், ஒரத்தி மற்றும் ராமாபுரம் துணை மின் நிலையங்களில் இருந்து, அச்சிறுபாக்கம் பேரூராட்சி மற்றும் எலப்பாக்கம், ஒரத்தி, திமுக்காடு, பள்ளிப்பேட்டை, முருங்கை, களத்துார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகுதி.
கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால், மக்கள் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்குகின்றனர்.
அதனால், விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
பெரும்பாலான வீடுகளில், வீட்டு வாசல் பகுதியில் உறங்குவதால், திருட்டு சம்பவங்கள் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாய பயிர்களுக்கு இரவு நேரங்களில் நீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறையினர், மின்வெட்டு குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதை தடுக்கும் வகையில், மின்வாரியத் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.