/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கும் நீர்பெயர் சாலை
/
மின்விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கும் நீர்பெயர் சாலை
மின்விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கும் நீர்பெயர் சாலை
மின்விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கும் நீர்பெயர் சாலை
ADDED : அக் 19, 2025 07:12 PM
சித்தாமூர்:பூரியம்பாக்கத்தில் இருந்து நீர்பெயர் செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில் இருந்து நீர்பெயர் கிராமத்திற்குச் செல்லும் 3 கி.மீ., துாரமுள்ள தார்ச்சாலை உள்ளது.
இது கீழ்வசலை, மேல்வசலை, நீலமங்கலம், விளாங்காடு, வேட்டூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.
வெளியூர்களுக்கு சென்று வரும் மக்கள் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் உள்ள பூரியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நீர்பெயர் கிராமத்திற்கு 3 கி.மீ., துாரம் நடந்து செல்கின்றனர்.
இந்த சாலையில், பல ஆண்டுகளாக மின்விளக்கு வசதி இல்லை.
சாலைக்கு அருகே மலைப்பகுதி உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் தேள், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், நீர்பெயர் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

