ADDED : செப் 07, 2026 03:30 AM

அ நிறம் | அளவு
பவுஞ்சூர்: கடுகுப்பட்டு அரசு பள்ளியில் இரும்பு கேட் அமைக்கப்படாததால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
பவுஞ்சூர் அருகே கடுகுப்பட்டு ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடுகுப்பட்டு, பாலுார் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். அதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலுகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் இல்லாததால், கால்நடைகள் அவ்வப்போது, பள்ளிக்குள் நுழைகின்றன. இதனால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கேட் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
