ADDED : ஜூலை 03, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கேளம்பாக்கம் அருகே சிறுசேரியில் தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு அதே வளாகத்தில் தங்குமிடம் அமைத்து தரப்பட்டுள்ளது.
நேற்று காலை, இங்கு தங்கி உள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபுபக்கர், 36, என்ற தொழிலாளி வரவில்லை.
அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு துாக்கில் தொங்கிய நிலையில் அபுபக்கர் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தனியார் நிறுவனம் சார்பில் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
