ADDED : மே 27, 2025 07:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ராமன், 21. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார்.
அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர், இவரது மொபைல் போனை திருடிச் சென்றார்.
ராமன் எழுந்து பார்த்த போது மொபைல் போன் திருடு போனது தெரிந்ததால், மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தார். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரித்ததில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ராஜேஷ் விஸ்வால், 34, என தெரிந்தது.
அவரை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.